Thursday, September 26, 2013
Wednesday, September 4, 2013
எந்த தொழில் தொடங்கினாலும் முதலில் செய்யவேண்டியவை
1. அம்மா அப்பாவிடம் கடன் வாங்காதே.
2. முதலீடும் முழுவதும் கடன் தொகையாக இருக்ககூடாது.
3. தொழிலில் இருந்து நீ விடுபடும் வரை அல்லது சாகும் வரை உழை உழை உழை.
4. எந்த தருணத்திலும் உன் தொழிலுக்கு உதவும் வாடிக்கையாளர், வேண்டியவர்கள் மீதும் கோபம் கொள்ளாதே.
5. நெகிழ்வு தன்மையை கடைபிடி.
6. பணத்திற்காக தொழில் செய்யாதே.
7. சமுகத்திற்கு கேடு விளைவிக்கும் தொழிலை செய்யாதே.
8. போட்டியாளரை கண்டு பொறமை கொள்ளாதே மாறாக போட்டி போடு அவனை உசுப்பு ஏற்று அதுதான் ஆரோக்கியமான தொழிலாக இருக்கும் அப்போது தான் உன்னாளும் அவனாலும் நுகர்வோருக்கு தரமான பொருளை சிறப்பாக மலிவாக தரும் எண்ணம் வேருன்றும்.
சிறப்பாக மலிவாக தரும் எண்ணம் வேருன்றும்.
9.தொழில் மென்மேலும் வளரும்போது அரசுக்கு வரி கட்டிய பின்னர் நிச்சயம் கணக்கில் வராத கருப்பு பணம் சேரும், அப்படி சேர்ந்தால் அதை வளர்ச்சி பெறாத கிராமம், புறநகர் போன்ற இடங்களில் தரமான சாலையை அமைத்து தா ஒரு நாட்டின் வளர்சிக்கு சாலை அவசியம், குடிநீர், அரசுப்பள்ளி பராமரிப்பு, சுகாதார நிலைய பராமரிப்பு சமுக சேவைக்கு முழு பணத்தையும் செலவு செய்.
10. தொழிலின் உச்சகட்டம் செல்லும்போது ஒரு அரசியல் கட்சியில் நிச்சயம் அங்கம் வகிக்கவேண்டும் இல்லை எனில் உன் சொத்துகள் பறிபோகும் நிலைவரும்.
இந்த நாட்டை ஆதாரமாக பயன்படுத்தி கோடி கோடியாக தொழிலில் சம்பாரிக்க எவ்வளவு உரிமை உள்ளதோ? அவ்வளவு உரிமை இந்த சமுகத்தின் நலன்களை பேணுவதிலும் இருக்கவேண்டும். நாட்டை நேசிக்கும் எவரும் இதை செய்ய யோசிக்கமாட்டார்கள்.